Advertisement

தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரல்

By: Nagaraj Fri, 30 June 2023 1:08:49 PM

தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரல்

சென்னை: தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அதில் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் விக்ரமைப் பார்த்து, ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் உள்ளனர்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சியான்' விக்ரம் முதன்முறையாக நடிக்கும் படம் 'தங்கலான்'. இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, பார்வதி திருவோத்து, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கோலார் தங்கவயல் பகுதியை மையமாக கொண்டு கதைகளம் உருவாகி வரும் நிலையில், படம் குறித்த அப்டேட்ஸ், மேக்கிங் வீடியோ என அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

tangalan,shooting,video,vikram,fans,surprise ,தங்கலான், படப்பிடிப்பு, வீடியோ, விக்ரம், ரசிகர்கள், ஆச்சரியம்

எந்த வேடமாக இருந்தாலும், அதை ஏற்று நடிக்கும் பக்குவமுள்ள நடிகர் விக்ரம், இப்படத்தில் ஆதிவாசி கெட்டப்பில் நடித்து வருகிறார். அவரது கெட்டப்பைப் பார்க்கும்போது, படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அதில் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் விக்ரமைப் பார்த்து, ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் உள்ளனர்.

Tags :
|
|
|