Advertisement

மார்க் ஆண்டனி படம் செப்டம்பரில் ரிலீசாகும் என தகவல்

By: Nagaraj Mon, 03 July 2023 4:11:25 PM

மார்க் ஆண்டனி படம் செப்டம்பரில் ரிலீசாகும் என தகவல்

சென்னை: மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. செப்.15 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ‘திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார்.

project,mark antony,movie,september,vishal ,திட்டம், மார்க் ஆண்டனி, திரைப்படம், செப்டம்பர், விஷால்

இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

டைம் டிராவலை மையமாகக் கொண்டு உருவான படமாகத் தெரிகிறது. விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தை வருகிற செப்.15 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|