Advertisement

நடிகர் சசிக்குமாருக்கு பாராட்டுக்களை பெற்று தந்த அயோத்தி படம்

By: Nagaraj Sun, 19 Mar 2023 1:26:01 PM

நடிகர் சசிக்குமாருக்கு பாராட்டுக்களை பெற்று தந்த அயோத்தி படம்

சென்னை: நடிகர் சசிகுமாருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம் என்ற பாராட்டுகளை அயோத்தி படம் பெற்று தந்துள்ளது.

சசிகுமார், லூம்ரா மற்றும் போஸ் வெங்கட் நடிப்பில் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், மந்திரமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “அயோத்தி’. இப்படம் சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் புனித யாத்திரை மேற்கொண்ட ஒரு குடும்பத்தில் ஏற்படும் மரணம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளை கூறும் இந்த படம் தற்போது ரசிகர்களை கவர ஆரம்பித்துள்ளது.

film,movie,sasikumar,movie,reception,fans ,அயோத்தி, சசிகுமார், திரைப்படம், வரவேற்பு, ரசிகர்கள்

இந்த வாரம் வெளியான படங்களில் மற்ற படங்கள் பெரிய அளவில் கவனம் ஈர்க்காத நிலையில், சசிகுமாருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம் என்ற பாராட்டுகளை பெற்று தந்துள்ளது.

இந்நிலையில் இப்படம் தற்போது மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. மேலும் இப்படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியில் அஜய் தேவ்கனும், தெலுங்கில் வெங்கடேஷும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
|
|
|