Advertisement

படம் சூப்பர்... தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம்சரண் பாராட்டினாராம்

By: Nagaraj Mon, 02 Jan 2023 10:28:04 PM

படம் சூப்பர்... தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம்சரண் பாராட்டினாராம்

சென்னை: விஜய்யின் வாரிசு படத்தை பார்த்த நடிகர் ராம் சரண் படம் சூப்பர் என்று மனதார பாராட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களுடன் கடந்த சில படங்களாக கூட்டணி அமைத்து நடித்து வந்தார். பீஸ்ட் படத்திற்கு பிறகு கொஞ்சம் டிராக் மாற்றி தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு வம்சி என்ற இயக்குனர் கதையை தேர்வு செய்து இப்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

super movie,ram charan,vijay,varisu movie,appreciation ,படம் சூப்பர், ராம் சரண், விஜய், வாரிசு படம், பாராட்டு

வழக்கமான தெலுங்கு படங்களை போல இப்படமும் குடும்பத்தை சுற்றிய எமோஷ்னல் கதைக்களம் என கூறப்படுகிறது, ரசிகர்களும் படத்தை காண தான் ஆவலாக வெயிட்டிங்.
தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகத்தில் அண்மையில் தெலுங்கு சினிமா நடிகர் ராம் சரண் விஜய்யின் வாரிசு படத்தை பார்த்துள்ளார். பார்த்துவிட்டு படம் சூப்பராக இருக்கிறது என மனதார புகழ்ந்துள்ளாராம்.

Tags :
|