- வீடு›
- பொழுதுபோக்கு›
- வரும் டிச.24ம் தேதி சென்னையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா
வரும் டிச.24ம் தேதி சென்னையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா
By: Nagaraj Fri, 11 Nov 2022 11:13:08 PM
சென்னை: சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார். குடும்ப ரசிகர்களை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது இந்த நிலையில், வாரிசு' படத்தின் ரஞ்சிதமே... ரஞ்சிதமே எனத் தொடங்கும் முழு பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் மற்றும் மானசி எம்.எம் இணைந்து இந்த பாடலை பாடியிருக்கிறார்கள்.
எப்போதும் போல விஜய் இப்பாடலில் தாறுமாறான நடனத்தை கொடுத்திருக்கிறார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த
நிலையில் 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட முறையில் நடைபெற
உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள்
உற்சாகமடைந்துள்ளனர்.