- வீடு›
- பொழுதுபோக்கு›
- ரசிகர் கேட்ட கேள்விக்கு பொறுமையாக பதிலளித்த இசைப்புயல்!
ரசிகர் கேட்ட கேள்விக்கு பொறுமையாக பதிலளித்த இசைப்புயல்!
By: Monisha Wed, 27 May 2020 5:19:57 PM
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் சமீபத்தில் தன வாங்கிய லாஜிக் புரோ எக்ஸ் என்ற மென்பொருள் குறித்து தனது ரசிகர்களுடன் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். இந்த லாஜிக் புரோ எக்ஸ் மென்பொருள் குறித்து தனது அனுபவங்களையும் தனது கருத்துக்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார்
இந்த நிலையில் இது குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பொறுமையாக பதிலளித்தார். இந்த நிலையில் ஒரு சில குறும்புக்கார ரசிகர்கள் ஏஆர் ரஹ்மானிடம் கிண்டல் தொனியில் கேள்வி கேட்டனர். அந்த கேள்விகளுக்கும் அவர் பொறுமையாக நகைச்சுவை உணர்வுடன் பதிலளித்தார். ஒரு ரசிகர் லாஜிக் புரோ எக்ஸ் மென்பொருளை பயன்படுத்த எனக்கு ஒரு ஆப்பிள் மேக் நீங்கள் பரிசாகக் கொடுத்தால் அதன் பிறகு நான் அதுகுறித்து அப்டேட் செய்கிறேன் என்று கூறி இருந்தார்.
அவருக்கு பதிலளித்த ஏஆர் ரஹ்மான் ’ஒரு பொருளை நீங்களே உழைத்து வாங்கினால்தான் அந்த பொருளை பயன்படுத்துவதற்கு மகிழ்ச்சி ஆக இருக்கும்’ என்று பதிலளித்துள்ளார். ரஹ்மானின் இந்த அர்த்தமுள்ள பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது
மேலும் இதே போன்று ஒரு சில குறும்புத்தனமான கேள்விகளுக்கு பொறுமையாக, கோபப்படாமல் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது