Advertisement

சலார் படம் ரிலீஸ் குறித்த வந்த செய்திகள் வதந்தியாம்

By: Nagaraj Tue, 16 May 2023 2:35:38 PM

சலார் படம் ரிலீஸ் குறித்த வந்த செய்திகள் வதந்தியாம்

கர்நாடகா: சலார் ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இயக்குநர் பிரஷாந்த் நீல். இவரது இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.

அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

poster,salar,information,movie release,rumors ,போஸ்டர், சலார், தகவல்கள், படத்தின் ரிலீஸ், வதந்திகள்

சலார் 2023 - செப்டம்பர் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ் அறிவித்திருந்தது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து சமூகவலைதளங்களில் வதந்திகள் வெளியான நிலையில் ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏஜிஎஸ் சினிமாஸில் இது குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது.

Tags :
|
|