Advertisement

பிச்சைக்காரன்-2 படத்தின் அடுத்த பாடலான பாடல் இன்று வெளியீடு

By: vaithegi Fri, 14 Apr 2023 11:56:54 AM

பிச்சைக்காரன்-2 படத்தின் அடுத்த பாடலான பாடல் இன்று வெளியீடு

விஜய் ஆண்டனி இயக்கத்தில் 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் தொடர் அப்டேட்களால் ரசிகர்கள் பெரும் உற்சாகம் ....

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இந்த படத்தின் 2-ம் பாகம் உருவாகி கொண்டு வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார்.

vijay antony,a beggar ,விஜய் ஆண்டனி ,பிச்சைக்காரன்

இதனை அடுத்து சமீபத்தில் இந்த படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி வைரலானது.இதையடுத்து இப்படத்தின் அடுத்த பாடலான 'கோவில் சிலையே' பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர்.

எனவே அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அண்ணன் -தங்கைக்கு இடையே உள்ள பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Tags :