Advertisement

ஜெயில் படத்தின் அடுத்தப்பாடல் 18ஆம் தேதி வெளியாகிறது!

By: Monisha Mon, 10 Aug 2020 6:45:14 PM

ஜெயில் படத்தின் அடுத்தப்பாடல் 18ஆம் தேதி வெளியாகிறது!

ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்து வரும் படங்களில் ஒன்றான 'ஜெயில்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது

நடிகர் தனுஷ் பாடிய 'காத்தோட காத்தானேன்' என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

jail,film,song,release,gv prakash ,ஜெயில்,படம்,பாடல்,ரிலீஸ்,ஜிவி பிரகாஷ்

'ஜெயில்' படத்தின் பத்து காசு என்று தொடங்கும் இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதியுள்ளார். பிரெண்ட்ஷிப் ஆன்ந்தமாக உருவாகியிருக்கும் இந்த பாடல் வரும் 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய 'ஜெயில்' படத்தில் ஜிவி பிரகாஷ், ராதிகா, ரோனிட் ராய், கவுதம் குலாட்டி, சுதன்ஷூ பாண்டே, யோகிபாபு, பிரகாஷ்ராஜ், சூரி, ரோபோ சங்கர், பாபிசிம்ஹா, பிரேம்ஜி அமரன், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|