Advertisement

ஒரே டேக்... கடுமையான முயற்சியால் வெற்றிப் பெற்ற நடிகர் பார்த்திபன்

By: Nagaraj Tue, 12 July 2022 6:55:31 PM

ஒரே டேக்... கடுமையான முயற்சியால் வெற்றிப் பெற்ற நடிகர் பார்த்திபன்

சென்னை: ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையை நடிகர், இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படம் பெற்றுள்ளது.

வித்தியாசமான முயற்சிகளை மட்டுமே தொடர்ந்து எடுத்து வரும் இயக்குனர் பார்த்திபன், இனி யாருமே முயற்சிக்க முடியாத அளவிற்கு எடுத்த முயற்சியே, ‛இரவின் நிழல்’.

படம் திரைக்கு வருவதற்கு முன், ஊடகங்களுக்கான சிறப்பு காட்சி இன்று திரையிடப்பட்டது. இதை படமாக்க யன்படுத்தப்பட்ட முயற்சிதான் தற்போது முக்கியமான ஒன்றாக இருக்கும். ‛ஒரு காட்சிக்காக 50 டேக் வாங்கினேன்...’ என பெருமையாக பேட்டியளிக்கும் பிரபலங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஒரே டேக்கில், ஒட்டுமொத்த படத்தையும் முடித்திருக்கிறார் பார்த்திபன்.

film,single tag,parthiban,appreciation,fans,achievement ,படம், ஒரே டேக், பார்த்திபன், பாராட்டுக்கள், ரசிகர்கள், சாதனை

அதுவும் எளிதில் நடந்துவிடவில்லை. 23 வது டேக்கில் தான், படம் முடிந்திருக்கிறது. அப்படியென்றால், எப்படி ஒரு டேக் என்று தோன்றுகிறதா? ஒரே டேக் தான்... ஆனால் அது எந்த இடத்தில் சொதப்பினாலும், ஆரம்பத்திலிருந்து தொடங்கி, புது டேக்காக எடுக்க வேண்டும்;
அப்படி தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார். ஒன்றல்ல இரண்டல்ல 23 முறை... அது போல, டேக், டேக், டேக் என... சிறு சிறு தவறுகளுக்கு கூட ரீ டேக் எடுத்து, ஒரு பெரிய போராட்டத்திற்கு மத்தியில் படத்தை நிறைவு செய்திருக்கிறார் பார்த்திபன்.

அந்த வகையில், ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட உலகின் முதல்படம் என்கிற பெயரை, இரவின் நிழல் பெற்றுள்ளது. பொதுவாக ஒரு படம் பார்க்கும் போது, அதில் குறிப்பிட்ட சிலரின் முயற்சி அல்லது திறமை பாராட்டப்படும். ஆனால், இந்த படத்தைப் பொருத்தவரை,ஒரு கதாபாத்திரம் சொதப்பினாலும், மீண்டும் மறுமுறை படத்தை எடுக்க வேண்டும். அப்படியொரு காலகட்டத்தில் தான், ஒட்டுமொத்த அணியும் கடுமையாக உழைத்து, இந்த சாதனையை சமமாக பகிர்ந்துள்ளனர்.

Tags :
|
|