Advertisement

பிக்பாஸ் வீட்டில் இந்தவாரம் ஓப்பன் நாமினேஷன் இன்று நடக்கிறது

By: Nagaraj Mon, 28 Dec 2020 9:29:20 PM

பிக்பாஸ் வீட்டில் இந்தவாரம் ஓப்பன் நாமினேஷன் இன்று நடக்கிறது

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து பேசிப் பேசியே சுவாரஸ்யத்தை குறைத்த அனிதா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து இன்று அடுத்தவாரத்திற்காக நாமினேஷன் ஓப்பனா நடத்தப்பட்டது.

விஜய் டிவியில் 'உலக நாயகன்' கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா எலிமினேட் செய்யப்பட்டனர்.

open nomination,competitors,big boss house,selection ,ஓப்பன் நாமினேஷன், போட்டியாளர்கள், பிக்பாஸ் வீடு, தேர்வு

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டார்.

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் 'பிக் பாஸ்' குரலில் "வீட்டின் தலைவர் ஆரியை நீங்க நாமினேட் செய்ய முடியாது" என்று ஒலிக்கிறது.

தொடர்ந்து ஓப்பன் நாமினேஷன் பிராஸஸில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற ஆஜித், கேப்ரில்லா, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன் ஆகியோரின் பெயர்களை போட்டியாளர்கள் தேர்வு செய்து குறிப்பிடுகிறார்கள்.

Tags :