Advertisement

எனக்கு கொடுத்த படுமொக்கை கதாபாத்திரம்... நடிகர் சதீஷ் ஓப்பன் டாக்

By: Nagaraj Thu, 19 Jan 2023 1:02:26 PM

எனக்கு கொடுத்த படுமொக்கை கதாபாத்திரம்... நடிகர் சதீஷ் ஓப்பன் டாக்

சென்னை: வாரிசு படத்தில் எனது கதாபாத்திரம் படு மொக்கை என்பது எனக்கே தெரியும். ஆனால், விஜய் என்கிற ஒரு மாஸ் ஹீரோ நடிக்கும் படத்தில் நாமும் நடிக்கிறோம் என்பதற்காகவே நான் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்து பலவித விமர்சனங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் வந்த இந்தப் படத்தில் ஏராளமான பிரபலங்கள் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பால் ரசிர்களின் மத்தியில் ஆர்வம் பெருமளவில் இருந்தது.

இந்தப் படத்தில் குஷ்பு நடிக்கிறார் என்ற செய்தி பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டாக்கி இருந்தது. ஆனால், படத்தில் குஷ்பு இடம்பெறும் காட்சியே இல்லை. அதேபோல், பெயருக்கு கதாநாயகி என்று போட்டுவிட்டு ராஷ்மிகாவையும் மொத்தமாக வீணடித்திருக்கிறார்கள்.

heir,actor satish,character,actor vijay ,வாரிசு, நடிகர் சதீஷ், கதாபாத்திரம், நடிகர் விஜய்

மேலும், இந்தப் படத்தில் பலரது கதாபாத்திரங்கள் அவசியமில்லாததாகவும், ‘ஏன்’ என்று கேட்கும்படியும் இருக்கிறது. அதிலும் நகைச்சுவை நடிகர் சதீஷின் கதாபாத்திரம் படு வேஸ்ட். இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் நடிகர் சதீஷ் வெளிப்படையாகவே பேசி உள்ளார்.

“வாரிசு படத்தில் எனது கதாபாத்திரம் படு மொக்கை என்பது எனக்கே தெரியும். ஆனால், விஜய் என்கிற ஒரு மாஸ் ஹீரோ நடிக்கும் படத்தில் நாமும் நடிக்கிறோம் என்பதற்காகவே நான் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தக் கதாபாத்திரத்தில் எனக்கு எந்தவிதமான பெரிய ஸ்கோப்பும் இல்லை எனக்கு முன்பே தெரியும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

Tags :
|