- வீடு›
- பொழுதுபோக்கு›
- லியோ படத்தில் அர்ஜூன் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியானது
லியோ படத்தில் அர்ஜூன் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியானது
By: Nagaraj Thu, 05 Oct 2023 2:06:50 PM
சென்னை: புதிய போஸ்டர் வெளியானது... லியோ படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகவுள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டிரைலர் இன்று 5ம் தேதி வெளியாகவுள்ளது.
லியோ திரைப்படத்திற்கான சென்சார் நடைபெற்ற நிலையில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் குழுவினர் வழங்கியுள்ளனர். இந்த நிலையில், லியோ படத்தின் அர்ஜுன் கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.