- வீடு›
- பொழுதுபோக்கு›
- சக்திமான் தொடர் சினிமா படமாகிறது!
சக்திமான் தொடர் சினிமா படமாகிறது!
By: Monisha Sat, 03 Oct 2020 10:35:49 AM
சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான், தூர்தர்ஷனில் 1997 முதல் 2005 வரை 8 ஆண்டுகள் ஒளிபரப்பானது. மொத்தம் 520 எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டன.
இதில் பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்ற சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இருந்தார். சக்திமான் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. சக்திமான் தொடர் விரைவில் சினிமா படமாக தயாராக உள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. இதனை முகேஷ் கன்னா தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-
"சக்திமான்தான் இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ. ஒரு தலைமுறையே சக்திமானை பார்த்து வளர்ந்து இருக்கிறது. சக்திமானை சூப்பர் ஆசான் என்று அழைப்பேன். தற்போது சக்திமான் தொடரை பிரமாண்ட சினிமா படமாக தயாரிக்க இருக்கிறோம்.
இதன் மூலம் எனது கனவு நனவாவதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. சக்திமான் இந்த காலத்துக்கும் பொருத்தமான கதை" என்றார். இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டு உள்ளனர். நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.