Advertisement

முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன... ஜெயிலர் படத்துக்குதான்

By: Nagaraj Mon, 07 Aug 2023 07:23:00 AM

முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன... ஜெயிலர் படத்துக்குதான்

சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல நிறுவனங்கள் ஜெயிலர் ரிலீஸ் தேதிக்கு விடுமுறை அளித்து ஊழியர்களுக்கு டிக்கெட்டுகளையும் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

film,jailer,minutes,tickets, ,ஜெயிலர், டிக்கெட்டுகள், நிமிடங்கள், படம்

ஜெயிலர் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

முன்னதாக ஜெயிலர் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றது. ஜூலை 28ஆம் தேதி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Tags :
|
|