Advertisement

சல்மான்கான் அணியும் வாட்சின் விலை... ரூ.46 லட்சமாம்!!!

By: Nagaraj Tue, 08 Aug 2023 8:37:27 PM

சல்மான்கான் அணியும் வாட்சின் விலை... ரூ.46 லட்சமாம்!!!

மும்பை: சல்மான்கானின் கைக்கடிகாரத்தின் விலை எவ்வளவு தெரியுமா என்ற கேள்விதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான்கானுக்கு ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம், லாபத்தில் பங்கு என்றெல்லாம் வருமானம் வருகிறது. சமீபகாலமாக வித்தியாசமான ஆடம்பர கைக்கடிகாரம் அணிந்தபடி நிகழ்ச்சிகளுக்கு சல்மான்கான் வருவதை பார்க்க முடிகிறது.

இன்னொரு கையில் பிரேஸ்லெட்டும் அணிந்து இருக்கிறார். இரண்டுமே ஒரே நிறத்தில் உள்ளன. பிரேஸ்லெட் அவரது தந்தை சலீம்கானால் பரிசாக வழங்கப்பட்டது.

cinema,price,salman khan,watch ,கைக்கடிகாரம், சல்மான்கான், சினிமா, விலை

அதுபோல் கைக்கடிகாரமும் அவருக்கு ஸ்பெஷலானது என்கின்றனர். அவர் அணிந்துள்ள கைக்கடிகாரத்தின் விலை ரூ.46 லட்சம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

இதில் தங்கம், வைரம் பதிக்கப்பட்டு உள்ளன. இந்த கைக்கடிகாரத்தை தனது அதிர்ஷ்டமான பொருட்களில் ஒன்றாகவே சல்மான்கான் கருதுகிறார். எனவேதான் எப்போதும் இதை கையில் அணிந்து கொள்கிறார்.

பொது நிகழ்ச்சிகளுக்கும் அணிந்து கொண்டு செல்கிறார். பிரேஸ்லெட், கைக்கெடிகாரத்தை தவிர்த்து வேறு எந்த ஆபரணங்களையும் அவர் தொடர்ந்து அணிவது இல்லையாம்.

Tags :
|
|