Advertisement

லியோ படத்திற்கு வந்த சிக்கல்

By: vaithegi Mon, 26 June 2023 10:49:56 AM

லியோ படத்திற்கு வந்த சிக்கல்

லியோ படத்தின் பாடல் போதைப் புழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதால் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ... மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் வெற்றி படங்களை தொடர்ந்து மத்தியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் லியோ படம் உருவாகி வருகிறது. லியோ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜயின் 49 வது பிறந்த நாளை ஒட்டி லியோ பட குழு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதோடு, இப்படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடலை வெளியிட்டது. இப்பாடலை விஜய் உடன் இணைந்து அனிருத் மற்றும் அசல் கோளாறு ஆகியோர் பாடி உள்ளனர்.

leo,vijay ,லியோ ,விஜய்


இந்நிலையில், நடிகர் விஜய்யின் லியோ பட பாடல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. போதைப்பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பாடல் இருப்பதால் தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் புகார் மனு அளித்துள்ளார். கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்து உள்ளார்.

மேலும் அந்த புகாரில், போதைப்பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் பாடல் இருப்பதால் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.

Tags :
|