Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • படம் வெளியீடு எப்போது என்று தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும் - இயக்குனர் சீனு ராமசாமி

படம் வெளியீடு எப்போது என்று தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும் - இயக்குனர் சீனு ராமசாமி

By: Monisha Wed, 27 May 2020 4:31:11 PM

படம் வெளியீடு எப்போது என்று தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும் - இயக்குனர் சீனு ராமசாமி

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா தயாரித்த திரைப்படம் ’மாமனிதன்’. இப்படம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டே முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது. இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படம் ஒருசில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும், அதன் பின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது

இந்த நிலையில் இந்த படம் குறித்து தற்போது இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது:-

mamanidhan film,producer,director seenu ramaswamy,release date,film crew ,மாமனிதன் படம்,தயாரிப்பாளர்கள்,இயக்குனர் சீனு ராமசாமி,ரிலீஸ் தேதி,படக்குழுவினர்

மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்களும் & RR இசைஞானி இளையராஜா முடித்து விட்டார். திரு.யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை’ என்று கூறியுள்ளார்.

மாமனிதன்’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் கடந்த சில மாதங்களாக தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் இந்த படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருவதாகவும், மிக விரைவில் இந்த படம் திரையில் வெளியாகும் என்று படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

Tags :