Advertisement

சமந்தா நடித்துள்ள குஷி படத்தின் 2ம் பாடல் ப்ரோமோ வீடியோ வெளியானது

By: Nagaraj Mon, 10 July 2023 11:15:45 PM

சமந்தா நடித்துள்ள குஷி படத்தின் 2ம் பாடல் ப்ரோமோ வீடியோ வெளியானது

சென்னை: சமந்தா நடித்துள்ள குஷி படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது. முழுமையான பாடல் வீடியோ வரும் 12ம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பின்னர் அதிலிருந்து மீண்டு, பின்னர் படங்களில் நடித்தார்.

song video,film crew,announcement,shiva nirvana,music composition ,பாடல் வீடியோ, படக்குழு, அறிவிப்பு, ஷிவ நிர்வாணா, இசையமைப்பு

யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஷிவ நிர்வாணா இயக்கி வருகிறார். ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி 70 மில்லியன் (7 கோடி) பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பினை பெற்றுவரும் நிலையில் இரண்டாவது பாடல் பற்றி படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போது 2வது பாடலின் ப்ரோமோ விடியோ வெளியானது. முழுமையான பாடல் வீடியோ ஜூலை 12இல் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

Tags :