Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மாமன்னன் படத்தின் உண்மையான மாமன்னன் வடிவேலுதான்: உதயநிதி நெகிழ்ச்சி

மாமன்னன் படத்தின் உண்மையான மாமன்னன் வடிவேலுதான்: உதயநிதி நெகிழ்ச்சி

By: Nagaraj Sun, 09 July 2023 11:14:37 PM

மாமன்னன் படத்தின் உண்மையான மாமன்னன் வடிவேலுதான்: உதயநிதி நெகிழ்ச்சி

சென்னை: மாமன்னன் படத்தின் உண்மையான மாமன்னன் வடிவேலு தான். நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

mamannan,thank you,vadivelu,udayanidhi stalin,first film,last film ,
மாமன்னன், நன்றி, வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், முதல் படம், கடைசி படம்

இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்காக படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, இப்படத்தின் உண்மையான மாமன்னன் வடிவேலு தான். நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி . இந்த படத்திற்கு நாங்கள் (படக்குழு) கொடுத்த விளம்பரத்தை விட நீங்கள் கொடுத்த விளம்பரத்தால் தான் மக்கள் மத்தியில் இப்படத்தை எளிதில் கொண்டு போய் சேர்க்க முடிந்தது.
தமிழ், மலையாளம், கன்னடம் என மொத்தம் 9 நாள்களில் இப்படம் 52 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. என்னுடைய முதல் படமும் (ஒரு கல் ஒரு கண்ணாடி ) வெற்றி.. கடைசி படமும் வெற்றி. சமூக நீதி - சமத்துவம் பேசிய மாமன்னனின் வெற்றிக்கு துணை நின்ற பத்திரிகை - ஊடக - இணையதள நண்பர்களுக்கு அன்பும், நன்றியும்" என்றார்.

Tags :