Advertisement

இராவணக் கோட்டம் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

By: Nagaraj Mon, 24 Apr 2023 6:15:11 PM

இராவணக் கோட்டம் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை: ரிலீஸ் தேதி அறிவிப்பு... இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `இராவண கோட்டம்’. சாந்தனு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான `இராவண கோட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

iravana kottam,announced,released date , அறிவிப்பு, இராவண கோட்டம், ரிலீஸ் தேதி

சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிம்பு இப்படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்நிலையில் ராவணன் கோட்டம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு போஸ்டரை வெளியிட்ட படக்குழு, மே 12-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் வெளியாகும் என அறிவித்துள்ளது.

Tags :