Advertisement

முலான் திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிவைப்பு

By: Monisha Sun, 28 June 2020 3:02:32 PM

முலான் திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிவைப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு நிலவுகிறது. இதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக திரைப்படங்களின் வெளியீடுகள் தள்ளிப்போயிருக்கின்றன. கடந்த மார்ச் 26ஆம் தேதி வெளியாகவிருந்த டிஸ்னியின் 'முலான்' படம் வரும் ஜூலை 25ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் பெரும்பாலான நாடுகளில் குறையாயததால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால திரையரங்குகள் திறக்கப்படுவதும் தள்ளிக் கொண்டே போகிறது. இதனை கருத்தில் கொண்டு ‘முலான்’ திரைப்படத்தின் வெளியீட்டை மீண்டும் தள்ளிவைத்துள்ளது டிஸ்னி நிறுவனம்.

1998ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற 'முலான்' கார்ட்டூன் திரைப்படத்தை மீண்டும் திரைப்படமாக டிஸ்னி. உருவாக்கியுள்ளது. இப்படத்தை நிக்கி கேரோ இயக்கியுள்ளார். இறுதிகட்டப்பணிகள் முடிந்த வெளியீட்டுக்கு தயாராகவுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகும் என்று டிஸ்னி அறிவித்துள்ளது.

Tags :
|
|