Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ரீமேக் ஆகும் முந்தானை முடிச்சு; ஹீரோவாக நடிக்கிறார் சசிகுமார்... இயக்குகிறார் பாக்யராஜ்

ரீமேக் ஆகும் முந்தானை முடிச்சு; ஹீரோவாக நடிக்கிறார் சசிகுமார்... இயக்குகிறார் பாக்யராஜ்

By: Nagaraj Wed, 20 May 2020 3:36:51 PM

ரீமேக் ஆகும் முந்தானை முடிச்சு; ஹீரோவாக நடிக்கிறார் சசிகுமார்... இயக்குகிறார் பாக்யராஜ்

முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கை மீண்டும் கையில் எடுத்துள்ளார் பாக்யராஜ். ஆனால் இந்த முறை அவர் நடிக்கவில்லை. பிரபல நடிகர் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

37 ஆண்டுகளுக்கு முன் பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியான படம் முந்தானை முடிச்சு. ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த இந்த படத்தை பாக்யராஜே இயக்கி இருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது இந்த படம்.

mundane knot,excitement,bhagyaraj,sasikumar,curfew ,முந்தானை முடிச்சு, உற்சாகம், பாக்யராஜ், சசிகுமார், ஊரடங்கு

தமிழில் பெற்ற பெரும் வெற்றியை கருத்தில் கொண்டு இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அங்கும் வசூலை வாரி குவித்தது. இந்நிலையில், தற்போது 37 ஆண்டுகளுக்கு பின் இந்த படம் ரீமேக் செய்யப்பட உள்ளது.

இதன் ரீமேக் உரிமையை ஏ.வி.எம். நிறுவனத்திடம் இருந்து ஜே.எஸ்.பி. சதீஷ் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதில் ஒரு மாற்றம் என்னவென்றால் தற்போதைய ரீமேக்கில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை இயக்குவது பாக்யராஜ் தான்.

இதர நடிகர், நடிகைகள் தேர்வு கொரோனா ஊரடங்குக்கு பின் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் செம உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :