Advertisement

பாரீஸ் ஜெயராஜ் படத்தின் இரண்டாம் லுக் வெளியாகியது!

By: Monisha Tue, 08 Dec 2020 5:10:53 PM

பாரீஸ் ஜெயராஜ் படத்தின் இரண்டாம் லுக் வெளியாகியது!

சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் 'பாரீஸ் ஜெயராஜ்' படத்தின் இரண்டாம் லுக் வெளியாகியுள்ளது.

சந்தானம் நடிப்பில் ஜான்சன் இயக்கத்தில் வெளியான 'ஏ1' திரைப்படம் வெற்றியைப் பெற்றதை அடுத்து மீண்டும் அதே டீம் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு டைட்டில் 'பாரீஸ் ஜெயராஜ்' என்று வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது 'பாரீஸ் ஜெயராஜ்' படத்தின் இரண்டாம் லுக் வெளியாகியுள்ளது. கலர்புல்லாக இருக்கும் சந்தானத்தின் இந்த லுக் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

santhanam,paris jayaraj,second look,fans,colorful ,சந்தானம்,பாரீஸ் ஜெயராஜ்,இரண்டாம் லுக்,ரசிகர்கள்,கலர்புல்

'ஏ1' இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்குசந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில், துரைராஜ் கலை இயக்கத்தில், பிரகாஷ் மாபு படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படத்தை லார்க் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிது வருகிறது.

மேலும் இந்த செகண்ட்லுக்கில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags :
|