Advertisement

விஜய் ஆண்டனி நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்!

By: Monisha Sat, 18 July 2020 1:28:43 PM

விஜய் ஆண்டனி நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்!

விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' மற்றும் 'காதலில் விழுந்தேன்' 'அங்காடித்தெரு' உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த 'நான்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் தந்த வெற்றியை அடுத்து 'சலீம்', 'இந்தியா பாகிஸ்தான்', 'பிச்சைக்காரன்' உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

vijay antony,super hit,part ii,cinema ,விஜய் ஆண்டனி,சூப்பர் ஹிட்,இரண்டாம் பாகம்,சினிமா

விஜய் ஆண்டனியின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் வரும் 24ஆம் தேதி, விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனியின் 10வது படமாக உருவாகவிருக்கும் இந்த படம் விஜய் ஆண்டனியின் சூப்பர் ஹிட் படமான 'பிச்சைக்காரன்' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வரும் 24-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருங்கள்.

தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி’ உள்பட ஒருசில படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags :