Advertisement

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது

By: Nagaraj Fri, 23 Sept 2022 10:40:39 PM

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது

சென்னை: சிவகார்த்திகேயனின் துள்ளலான நடனத்தில் ஜெசிகா பாடல்... 'பிரின்ஸ்' செகண்ட் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் செம உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


'பிரின்ஸ்' படத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள ஜெசிகா பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'பிரின்ஸ்'. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

dance,sivakarthikeyan,prince,attention,fans ,நடனம், சிவகார்த்திகேயன், பிரின்ஸ், கவனம், ரசிகர்கள்

முழுக்க முழுக்க காமெடி ஜோனரில் உருவாகும் இப்படம் தீபாவளியையொட்டி வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது பாடலான ஜெசிக்கா பாடல் தற்போது வெளியாகி உள்ளது. தெருக்குரல் அறிவு எழுதியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயனின் துள்ளலான நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Tags :
|
|