Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடக்கம்

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடக்கம்

By: vaithegi Tue, 09 May 2023 12:06:57 PM

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடக்கம்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு தொடக்கத்தில் வெளியானது. அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதையடுத்து ‘விடாமுயற்சி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் நடிகர் நடிகைகள் குறித்து அறிவிப்பு எதையும் படக்குழு வெளியிடவில்லை. இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 22-ம் தேதி தொடங்கும் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

perseverance,ajith ,விடாமுயற்சி,அஜித்

அஜித் நேபாளம் மற்றும் பூட்டான் பைக் டூரை முடித்து விரைவில் திரும்ப உள்ளதாகவும், இந்த படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை 70 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் 40 நாட்கள் அஜித் நடிக்கும் போர்ஷன் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும், நிரவ் ஷா ஒளிப்பதிவளராக பணியாற்றுவார் என்றும் கூறப்படுகிறது.


Tags :