Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • குஷி படத்தின் படப்பிடிப்பு நிறைவு... படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

குஷி படத்தின் படப்பிடிப்பு நிறைவு... படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

By: Nagaraj Mon, 17 July 2023 7:23:31 PM

குஷி படத்தின் படப்பிடிப்பு நிறைவு... படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஐதராபாத்: ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் சமந்தா-விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் ‘குஷி’. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

completion,film,khushi,shooting, ,குஷி, நிறைவு, படப்பிடிப்பு, படம், சமந்தா, இணையம்

சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள தயாரிப்பு நிறுவனம், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|