Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடிக்கும் குஷி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடிக்கும் குஷி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

By: Nagaraj Mon, 27 Feb 2023 09:54:42 AM

விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடிக்கும் குஷி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

சென்னை: விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்து வந்த ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா படப்பிடிப்புகளில் பிசியாக பங்கேற்று நடித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சமந்தா சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த நோய் குணமாக சிறிது காலம் ஆகும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்தினர்.

kushi,sagunthalam,samantha, ,குஷி, சமந்தா, சாகுந்தலம்

சிகிச்சை பெற்று வந்ததால் சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

சமந்தா நடிப்பில் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்து வந்த ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

Tags :
|