Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வீரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு... படக்குழுவினர் மற்ற பணிகளில் மும்முரம்

வீரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு... படக்குழுவினர் மற்ற பணிகளில் மும்முரம்

By: Nagaraj Sat, 01 Apr 2023 7:04:15 PM

வீரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு... படக்குழுவினர் மற்ற பணிகளில் மும்முரம்

சென்னை: ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் வீரன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது படக்குழு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் மும்முரமாக உள்ளது.

இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி, ‘மீசையை முறுக்கு’ படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார்.

இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி தற்போது ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ‘வீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது படக்குழு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் மும்முரமாக உள்ளது.

aadi,hip hop,promo song,release,thundergaran, ,ஆதி, தண்டர்காரன், புரோமோ பாடல், வெளியீடு, ஹிப் ஹாப்

ஃபேன்டஸி காமெடி ஆக்‌ஷன் எண்டர்டெயினராக உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக ஆதிரா ராஜ், வில்லனாக வினய் ராய். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி நடித்த சிவகுமாரின் சபதம், அன்பறிவு போன்ற படங்களைத் தயாரித்த ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் தற்போது ‘வீரன்’ படத்தின் ‘தண்டர்காரன்’ ப்ரோமோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹிப் ஹாப் ஆதி இசையில் பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்தப் பாடலை ஹிப் ஹாப் ஆதி மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|