Advertisement

விடுதலை 2 ஷூட்டிங் நீள்கிறது... ரிலீஸ் மே மாதம் என்று தகவல்

By: Nagaraj Mon, 27 Nov 2023 5:09:40 PM

விடுதலை 2 ஷூட்டிங் நீள்கிறது... ரிலீஸ் மே மாதம் என்று தகவல்

சென்னை: விடுதலை 2 படத்தில் மேலும் சில கதாபாத்திரங்களை சேர்க்க வேண்டி இருப்பதால் ஷூட்டிங் இன்னும் 30 நாட்கள் அதிகமாக நடத்த வேண்டியுள்ளதாம். அதனால் விடுதலை 2 திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்துக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது.

again,delay,release 2,shooting ,தாமதம், மீண்டும், விடுதலை 2, ஷூட்டிங்

இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி பின்னர் திருவள்ளூரில் நடைபெற்றது. இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டு வருகிறார். இந்நிலையில் இப்போது படத்தில் மேலும் சில கதாபாத்திரங்களை சேர்க்க முடிவு செய்துள்ளாராம்.

அதனால் ஷூட்டிங் இன்னும் 30 நாட்கள் அதிகமாக நடத்த வேண்டியுள்ளதாம். அதனால் விடுதலை 2 திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்துக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Tags :
|
|