Advertisement

100க்கு 6 மார்க் பெற்ற மகன் ..கதறி அழுத தந்தை..

By: Monisha Tue, 05 July 2022 8:52:33 PM

100க்கு 6 மார்க் பெற்ற மகன் ..கதறி அழுத தந்தை..

பெய்ஜிங்: மகன் கணக்கில் வாங்கிய மதிப்பெண்களைப் பார்த்து, தந்தை ஒருவர் தேம்பித் தேம்பி அழும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.அந்த தந்தையின் அழுகைக்கான காரணம் தெரிந்தால், நீங்களும் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்..வைரலாகியுள்ள வீடியோவில் ஒருவர், தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்க, அவர் பின்னல் ஒரு பெண் சிரித்து கொண்டு இருக்கிறார்.
"இனி நான் எதை பற்றியும் கவலைப்பட மாட்டேன். என்னுடைய அனைத்து முயற்சிகளும் வீணாகி விட்டது. இனி அவன் தானாகவே போராடி பார்த்துக் கொள்ளட்டும்" என அந்நபர் அழுது கொண்டே கூறுகிறார்.தனது உழைப்பு வீண் போகாது, இம்முறை தன் மகன் நிறைய மதிப்பெண் வாங்குவான் என எதிர்பார்த்துள்ளார். ஆனால் அவரது எதிர்பார்ப்பை பொய்யாக்கி, அச்சிறுவன் இம்முறை நடந்தத் தேர்வில் நூறுக்கு ஆறு மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்து போய்தான், அப்படித் தேம்பி தேம்பி அழுதார் அந்தத் தந்தை.

son,father,mark,fail ,மகன் ,அப்பா,மார்க்,கண்ணீர்,

ஆனால் இதனை ஏன் அவரது மனைவி சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்துள்ளார் என்பதன் பின்னணியிலும் ஒரு கதை உள்ளது. அதாவது, சம்பந்தப்பட்ட அந்தச் சிறுவன் கணக்குப் பாடத்தில் மக்கு மாணவன் இல்லை.
நூறுக்கு 50 அல்லது 60 மதிப்பெண்கள் எடுத்து வந்துள்ளான். ஆனால் அவனை நூற்றுக்கு நூறு வாங்க வைக்கிறேன் என முயற்சி செய்துதான், இப்போது ஆறு மதிப்பெண்கள் வாங்க வைத்திருக்கிறார் அந்தத் தந்தை.

Tags :
|
|
|