- வீடு›
- பொழுதுபோக்கு›
- ‘மாமதுர’ பாடல் வெளியாகி செம வைரல்... ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள ஜிகர்தண்டா-2
‘மாமதுர’ பாடல் வெளியாகி செம வைரல்... ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள ஜிகர்தண்டா-2
By: Nagaraj Mon, 09 Oct 2023 5:39:55 PM
சென்னை: ஜிகர்தண்டா- 2 படத்தின் மாமதுர பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தில் சித்தார்த் முக்கிய வேடத்தில் நடிக்க, லட்சுமி மேனன், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிகர்தண்டாவில் பாபி சிம்ஹாவை ‘அசால்ட் சேது’ என ரசிகர்கள் கொண்டாடினர்.
அந்த கதாபாத்திரத்திற்காக 2014-ம் ஆண்டு தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். இப்படத்தின், இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அண்மையில் வெளியிட்டார். அதன்படி ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா மோதிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ள காட்சிகள், ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு ’ஜிகர்தண்டா டபுஸ் எக்ஸ்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் முதல் பாடலான ‘மாமதுர’பாடல் வெளியாகி தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. சந்தோஷ் நாராயணின் பாடலுக்கு ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.