Advertisement

தோனி தயாரிக்க உள்ள தமிழ் படத்தின் கதை அவர் மனைவி எழுதியது

By: Nagaraj Tue, 25 Oct 2022 10:57:06 PM

தோனி தயாரிக்க உள்ள தமிழ் படத்தின் கதை அவர் மனைவி எழுதியது

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் திரைப்படங்கள் தயாரிக்க உள்ளார். இவரது முதல் தமிழ் படம் யாருடன் என்பதுதான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட் டாபிக்.


தோனி இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்தவர். இவர் கிரிக்கெட் ஓய்விற்கு பிறகு படங்களை தயாரிக்கலாம் என்ற முடிவு எடுத்துள்ளார்.

dhoni,production,jolly,kathayamsam,vijay,nayanthara ,தோனி, தயாரிப்பு, ஜாலி, கதையம்சம், விஜய், நயன்தாரா

இதன் முதற்கட்டமாக தமிழ் படம் ஒன்றை எடுக்கலாம் என்று தோனி முடிவு செய்துள்ளார், அதுவும் முதல் கதையை தன் மனைவி சாக்‌ஷி எழுதிய கதையை படமாக்க முடிவு செய்துள்ளாராம்.

இது குடும்பத்துடன் பார்க்க கூடிய ஜாலியான கதையம்சம் கொண்ட படமாம். இதை தொடர்ந்து தளபதி விஜய், நயன்தாரா போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் கூட்டணி அமைக்க தோனி முடிவு செய்துள்ளாராம்.

Tags :
|
|
|