Advertisement

விக்ரம் திரைப்படத்தின் வெற்றி சந்தோஷத்தை அளிக்கிறது

By: Nagaraj Mon, 13 June 2022 9:56:59 PM

விக்ரம் திரைப்படத்தின் வெற்றி சந்தோஷத்தை அளிக்கிறது

கிருஷ்ணகிரி: விக்ரம் திரைப்படம் வெற்றி என்பது சந்தோசமாக உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பல்வேறு கிராமங்களில் நீலம் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் நூலகம், அரசியல் பள்ளி, இரவுப் பாடச்சாலை உள்ளிட்டவற்றை கபாலி, காலா திரைபடங்களை இயக்கிய இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, அம்பேத்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மக்களுக்கு சமூக மேம்பாட்டை அடைவதற்கான வாய்ப்பை உருவாக்குவதே இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.

rajini,kamal,story,no,director,ranjith,answer ,ரஜினி, கமல், கதை, இல்லை, இயக்குனர், ரஞ்சித், பதில்

'கமல் நடித்த விக்ரம் திரைப்பட வெற்றியை தொடர்ந்து நீங்கள் கமலை வைத்து இயக்க உள்ள படத்தில் பிரம்மாண்டம் குறையாமலிருக்க கதையில் மாற்றம் உண்டா?' என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பா.ரஞ்சித், 'அப்படி எதுவும் இல்லை. விக்ரம் திரைப்படம் வெற்றி என்பது சந்தோசமாக உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த திரைப்பட வெற்றி தமிழ் திரையுலகிற்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் உற்சாகம் இனி வரும் படங்களுக்கும் பரவும்' என்றார்.

தொடர்ந்து, ரஜினி - கமல் இருவரையும் கொண்டு படம் இயக்குவதற்கான கதை வைத்துள்ளீர்களா என்கிற கேள்விக்கு, சிரித்துக்கொண்டே 'இல்லை' என்று பதிலளித்தார் பா.ரஞ்சித்.

சேத்துமான் திரைப்படத்திற்கு பல தரப்பிலிருந்து நல்ல வரவேற்பும், எதிர்மறைக் கருத்துக்களும் வந்துகொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். இதுப்போன்று, மக்களை சேரக்கூடிய திரைப்படங்களை இயக்க நீலம் புரொடக்ஷன் எப்போதும் தயாராகி வருவதாகவும் பா.ரஞ்சித் தெரிவித்தார்.

Tags :
|
|
|
|