Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் தனுஷூடன் நாகர்ஜூனா இணைந்து நடிக்க உள்ளதாக படக்குழு அறிவிப்பு

நடிகர் தனுஷூடன் நாகர்ஜூனா இணைந்து நடிக்க உள்ளதாக படக்குழு அறிவிப்பு

By: vaithegi Wed, 30 Aug 2023 12:06:29 PM

நடிகர் தனுஷூடன் நாகர்ஜூனா இணைந்து நடிக்க உள்ளதாக படக்குழு அறிவிப்பு

நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தை முடித்துவிட்டார். இதையடுத்து இதில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ் குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அடுத்து, தனது 50 படத்தை தனுஷ் இயக்கி நடிக்கிறார்.

இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். தலைப்பிடப்படாத இந்த படம் ‘டி51’ என்று அழைக்கப்படுகிறது.

actor dhanush,nagarjuna ,நடிகர் தனுஷ் ,நாகர்ஜூனா


தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப்படம் வெளியாகயிருக்கிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தனுஷூடன் இணைந்து நாகர்ஜூனா நடிக்கிறார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. நாகர்ஜூனாவின் பிறந்த நாளையொட்டி இந்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

Tags :