Advertisement

தங்கலான் படத்தின் டீசர், வெளியீட்டுத் தேதி அறிவித்த படக்குழுவினர்

By: Nagaraj Sat, 28 Oct 2023 5:10:30 PM

தங்கலான் படத்தின் டீசர், வெளியீட்டுத் தேதி அறிவித்த படக்குழுவினர்

சென்னை: வெளியீட்டு தேதி அறிவிப்பு... தங்கலான் படத்தின் டீசர் மற்றும் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

tangalan,crew,announcement,movie,january ,தங்கலான், படக்குழு, அறிவிப்பு, திரைப்படம், ஜனவரி மாதம்

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் டீசர் வரும் நவம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|