Advertisement

பகவந்த் கேசரி படத்தின் டீசர் வெளியானது... ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Sat, 10 June 2023 8:35:24 PM

பகவந்த் கேசரி படத்தின் டீசர் வெளியானது... ரசிகர்கள் உற்சாகம்

ஐதராபாத்: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ள பகவந்த் கேசரி படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் செம உற்சாகத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

பாலகிருஷ்ணாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வீரசிம்ம ரெட்டி. இப்படம் பாலகிருஷ்ணாவின் ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது.

அதன் பிறகு பகவந்த் கேசரி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். இப்படத்தில் காஜல் அகர்வால், ஸ்ரீலீலா உட்பட நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

bala krishna,film,movie , டீசர், வெளியீடு, வைரல், ரசிகர்கள், உற்சாகம்

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்தப் படமும் தனது வழக்கம் போல் ஆக்ஷன் படம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, கையில் ஆயுதம் ஏந்திய பாலையாவின் போஸ்டர் ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்நிலையில் பாகுவரந்த் கேசரி படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டீசர் வெளியான 7 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஒரு லட்சம் லைக்குகளை பதிவிட்டுள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|