Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சிம்புவின் பத்து தல திரைப்படத்தின் டீசர் வெளியானது... ரசிகர்கள் உற்சாகம்

சிம்புவின் பத்து தல திரைப்படத்தின் டீசர் வெளியானது... ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Fri, 03 Mar 2023 11:43:44 PM

சிம்புவின் பத்து தல திரைப்படத்தின் டீசர் வெளியானது... ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக மாறி வருகிறது.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

teaser,crew,batu thala,movie,namma chatham,fans ,டீசர், படக்குழுவினர், பத்து தல, படம், நம்ம சத்தம், ரசிகர்கள்

கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ படத்தின் முதல் பாடலான ‘நம்ம சத்தம்’ பாடலின் லிரிக்கல் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், இன்று இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|
|