- வீடு›
- பொழுதுபோக்கு›
- சைரன் படத்தின் டீசரை இன்று பிக்பாஸ் வீட்டில் வெளியிடுகிறார்களாம்
சைரன் படத்தின் டீசரை இன்று பிக்பாஸ் வீட்டில் வெளியிடுகிறார்களாம்
By: Nagaraj Sat, 11 Nov 2023 9:52:30 PM
சென்னை: 'சைரன்' படத்தின் டீசர் இன்று பிக்பாஸ் வீட்டில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் 'சைரன்'. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'சைரன்' படத்தின் டீசர் இன்று பிக்பாஸ் வீட்டில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், இந்த டீசரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.