Advertisement

மாஸ்க் குறும்படத்தின் டீசர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது!

By: Monisha Tue, 03 Nov 2020 5:15:39 PM

மாஸ்க் குறும்படத்தின் டீசர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது!

அஜீத் நடித்த 'மங்காத்தா' உள்பட ஒருசில திரைப்படங்களை தயாரித்த தயாநிதி அழகிரி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கிய குறும்படத்திற்கு 'மாஸ்க்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் அவதாரம் எடுத்த தயாநிதி அழகிரிக்கு அனிருத், ஹரிஷ் கல்யாண், சாந்தனு, நிதின் சத்யா, சூரி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த குறும்படத்தின் டீசர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

mask short film,teaser,dayanidhi alagiri,sivakarthikeyan,vijay sethupathi ,மாஸ்க் குறும்படம்,டீசர்,தயாநிதி அழகிரி,சிவகார்த்திகேயன்,விஜய்சேதுபதி

இந்த டீசரை நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் வெளியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாநிதி அழகிரியின் சகோதரரும் நடிகருமான அருள்நிதி தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ரிலீஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|