- வீடு›
- பொழுதுபோக்கு›
- கழுவேர்த்தி மூர்க்கன் படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு
கழுவேர்த்தி மூர்க்கன் படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு
By: Nagaraj Sun, 23 Apr 2023 10:03:13 PM
சென்னை: கழுவேர்த்தி மூர்க்கன் படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிகர் அருள்நிதி நடிப்பில் ராட்சசி பட இயக்குநர் சை கௌதம்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன்.
ஒலிம்பியா மூவிஸ் வழங்கும் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சார்பட்டா பரம்பரை கதாநாயகி துஷாரா விஜயன் மற்றும் சந்தோஷ் பிர்தாப், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.
சமீபத்தில் டாடா படம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதன் தயாரிப்பாளர்தான் இந்தப் படத்திற்கும் என்பதால் ரசிகர்களிடையே கழுவேத்தி மூர்க்கன் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. டி.இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய நாகூரன் எடிட் செய்துள்ளார்.