Advertisement

ஹனு–மேன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பு

By: Nagaraj Wed, 11 Jan 2023 03:39:13 AM

ஹனு–மேன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பு

சென்னை: இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'ஹனு - மேன்'. இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் சூப்பர் ஹீரோ படைப்பான 'ஹனு-மேன்', எதிர்வரும் மே மாதம் 12ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் உலகளவில் வெளியாகிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'ஹனு - மேன்'. இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல அடி உயர பிரம்மாண்டமான அனுமான் சிலையின் தோற்றத்துடன் தொடங்கும் முதல் காட்சியிலிருந்து, பனி படர்ந்த இமயமலையில் உள்ள குகைக்குள் நுழைந்து கேமராவின் கடைசிக் கோணம் வரை நீளும் அந்த டீசரில 'ராம் ராம்' எனும் கோஷம் ஒலிக்கிறது.

hanuman,movie,teja sajja,varalakshmi,starring,music ,ஹனுமேன், திரைப்படம், தேஜா சஜ்ஜா, வரலட்சுமி, நடித்துள்ளனர், இசை

தியானத்தில் அமர்ந்திருக்கும் ஹனுமேனின் காட்சி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. உலகெங்கும் திரைத்துறை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் விநியோஸ்தர்கள் 'ஹனு-மேன்' படத்தைத் தங்களது நாடுகளில் வெளியிடத் தயாரிப்பாளர்களுடன் ஆர்வத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். பெரிய பட்ஜெட் படங்களுடன் ஒப்பிடும்போது ஹனு-மேன் படத்தின் பட்ஜெட் சிறியதுதான் என்றாலும், ஹாலிவுட் தரத்தில் அமைந்திருப்பதால் இதற்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது.

இதனால் தயாரிப்பாளர்கள் இந்த 'ஹனு-மேன்' திரைப்படத்தை மே மாதம் 12ஆம் தேதி அன்று கோடைகால விடுமுறையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் என இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், மாண்டரீன், ஜப்பானிய மொழியில் வெளியிடப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.

இந்த அறிவிப்புக்காக பிரத்யேகக் காணொளி ஒன்றையும் படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இதில் உலக வரைபடத்தைக் காண்பித்து, எந்தெந்த நாடுகளில் வெளியாகிறது என்பதைக் குறிப்பிட்டு, அதன் பின்னணியில் ஆஞ்சநேயரின் ஸ்தோத்திரத்தையும், இசையையும் இணைத்திருக்கிறார்கள். இறுதியில் 'அனுமானின் பேரரசு' எனத் தனித்துவமான அடையாளத்தை காட்டும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தக் காணொளி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தத் திரைப்படத்தில் தேஜா சஜ்ஜாவுடன் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர், கெட் அப் சீனு, சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கௌர ஹரி, அனுதீப் தேவ், கிருஷ்ணா சௌரப் என மூவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

Tags :
|