- வீடு›
- பொழுதுபோக்கு›
- தெலுங்கு பதிப்பு தனுஷின் 3 படத்தின் மறு வெளியீட்டுக்கு அமோக வரவேற்பு
தெலுங்கு பதிப்பு தனுஷின் 3 படத்தின் மறு வெளியீட்டுக்கு அமோக வரவேற்பு
By: Nagaraj Mon, 12 Sept 2022 6:30:13 PM
சென்னை: '3' படத்தின் தெலுங்கு பதிப்பை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மறு வெளியீடு செய்துள்ளனர். அங்கு இந்த படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான படம் '3'. இந்த படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 2012-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மூலம் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இதில் இடம்பெற்ற, 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் ரசிகர்கள் மத்தியில்
பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு தற்போது
'3' படத்தின் தெலுங்கு பதிப்பை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மறு வெளியீடு
செய்துள்ளனர். அங்கு இந்த படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தின் ஒரு பாடலை திரையரங்கில் இருக்கும் அனைவரும் பாடும் வீடியோ சமூக
வலைதளத்தில் வைரலானது.
மேலும்
திரையரங்குகளில் 200-க்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக
ஓடி தெலுங்கு திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ்
தற்போது நடித்து வரும் வாத்தி படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில்
தயாராகிறது. '3' படத்தின் வெற்றியால் தெலுங்கில் வாத்தி படத்துக்கு பெரிய
வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.