- வீடு›
- பொழுதுபோக்கு›
- கமல் படத்தின் படக்குழுவினருக்கு அசத்தல் விருந்து வைத்த தியேட்டர் உரிமையாளர்
கமல் படத்தின் படக்குழுவினருக்கு அசத்தல் விருந்து வைத்த தியேட்டர் உரிமையாளர்
By: Nagaraj Sun, 10 July 2022 2:42:47 PM
சென்னை: பிரியாணி விருந்து அசத்தல்... விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து வெற்றி தியேட்டர் உரிமையாளர் ஊழியர்களுக்கு விருந்து வைத்து அசத்தியுள்ளார்.
சென்னையின் பிரபல தியேட்டர்களில் ஒன்று குரோம்பேட்டையில் இருக்கும் வெற்றி தியேட்டர். பல திரைத்துறை பிரபலங்கள் இந்த தியேட்டரில் தங்கள் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் ஆரவாரத்துடன் பார்ப்பது மகிழ்வது வழக்கம்.
விக்ரம் படத்தில் கூட வெற்றி தியேட்டர் ஒரு காட்சியில் இடம்
பெற்றிருக்கும். விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து
கமல்ஹாசன் படக் குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தினார்.
அதே
போல தற்போது வெற்றி தியேட்டரின் உரிமையாளர் ராகேஷ் கௌதமன் 'விக்ரம்'
படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து தியேட்டர் ஊழியர்களுக்கு சிறப்பான
பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில்
வைரலாகி வருகிறது.