Advertisement

டிக்கிலோனா படத்தின் மூன்றாவது போஸ்டர் நேற்று வெளியாகியது!

By: Monisha Sat, 30 May 2020 3:44:17 PM

டிக்கிலோனா படத்தின் மூன்றாவது போஸ்டர் நேற்று வெளியாகியது!

காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் சந்தானம் தற்போது தொடர்ச்சியாக வெற்றி படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று ’டிக்கிலோனா’. இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் மூன்று நாட்கள் தொடர்ந்து வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி கடந்த 2 நாட்களில் வெளியான இரண்டு போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக நேற்று முன்தினம் வெளியான கிட்டத்தட்ட நிர்வாண நிலையில் சந்தானம் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

actor santhanam,dikkilona film,third poster,cricketer harbhajan singh ,நடிகர் சந்தானம்,டிக்கிலோனா படம்,மூன்றாவது போஸ்டர்,கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங்

இந்த நிலையில் ’டிக்கிலோனா’ படத்தின் மூன்றாவது போஸ்டர் நேற்று வெளியாகியது. இந்த போஸ்டரில் ஸ்டைலாக சந்தானமும் அவர் அருகில் யோகிபாபுவும் நிற்கும் வகையில் உள்ளது. இந்த போஸ்டர் இந்த படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் தெரிவித்து வருகின்றனர்

சந்தானம் ஜோடியாக அனஹா நடித்துள்ள இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார். ஹர்பஜன்சிங் நடிக்கும் முதல் படம் இதுதான். கார்த்திக் யோகி இயக்கி வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

Tags :