Advertisement

குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னர் மைம் கோபி என்று தகவல்

By: Nagaraj Tue, 25 July 2023 7:30:29 PM

குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னர் மைம் கோபி என்று தகவல்

சென்னை: குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னர் மைம் கோபி என்று தெரிய வந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 4வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பைனல் போட்டி ஒளிபரப்பாகவுள்ள நிலையில் வெற்றியாளர் யார் என்று தெரிந்துவிட்டது.

mime gobi,internet,winner,information,prize money,srushti ,மைம் கோபி, இணையம், வின்னர், தகவல், பரிசுத் தொகை, ஸ்ருஷ்டி

ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி நடிகர் மைம் கோபி தான் குக் வித் கோமாளி சீசன் 4ன் வெற்றியாளர் என்று உறுதியாகி உள்ளது. இவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தை ஸ்ருஷ்டி பிடிக்க விசித்திரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில், குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் மைம் கோபிக்கு ரூ. 10 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இரண்டாம் இடத்தை பிடித்த ஸ்ருஷ்டிக்கு ரூ. 5 லட்சம் பரிசு தொகையாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|