Advertisement

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தலைநகரம்-2 படத்தின் டிரெய்லர்

By: Nagaraj Sat, 17 June 2023 11:12:05 PM

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தலைநகரம்-2 படத்தின் டிரெய்லர்

சென்னை: இயக்குனர் வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தலைநகரம்-2’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சுந்தர் சி.

இவர் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் தற்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்துள்ளார்.

23rd,sundar.c,thalainagaram-2,theater, ,23-ஆம் தேதி, சுந்தர்.சி, தலைநகரம்-2, திரையரங்கு

இப்படத்தை அஜித்தின் ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 கேண்டில்ஸ்’, சுந்தர்.சி நடித்த ‘இருட்டு’ ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘தலைநகரம்-2’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது.

மேலும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தலைநகரம்-2’ திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|