Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை ‘லியோ’ ட்ரெய்லர் படைப்பு

24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை ‘லியோ’ ட்ரெய்லர் படைப்பு

By: vaithegi Sun, 08 Oct 2023 4:25:07 PM

24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை ‘லியோ’ ட்ரெய்லர் படைப்பு

யூடியூபில் ‘லியோ’ ட்ரெய்லர் சாதனை ..விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள படம் ‘லியோ’. இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்து உள்ளனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இதனை அடுத்து வருகிற அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

leo,trailer,picture ,லியோ,ட்ரெய்லர் ,படம்

கடந்த 5-ம் தேதி இப்படத்தில் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் இது தொடர்பான ஹேஷ்டேகுகள் எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகின.

இந்நிலையில், இந்த ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் வெளியான 24 மணி நேரத்தில் 31 மில்லியன் பார்வைகளை பெற்று உள்ளது. தென்னிந்தியாவில் 24 மணி நேரத்துல் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை லியோ ட்ரெய்லர் படைத்து உள்ளது.

மேலும், தென்னிந்தியாவில் 24 மணி அதிக லைக்குகளை (2.64 மில்லியன்) பெற்ற ட்ரெய்லரும் இதுவாகும்.

Tags :
|