Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிரின்ஸ் படத்தின் டிரைலர் வெளியானது... ஆசிரியராக வருகிறார் சிவகார்த்திகேயன்

பிரின்ஸ் படத்தின் டிரைலர் வெளியானது... ஆசிரியராக வருகிறார் சிவகார்த்திகேயன்

By: Nagaraj Mon, 10 Oct 2022 09:27:44 AM

பிரின்ஸ் படத்தின் டிரைலர் வெளியானது... ஆசிரியராக வருகிறார் சிவகார்த்திகேயன்

சென்னை: பிரின்ஸ் படத்தில் பள்ளி ஆசிரியராக நடிக்கிறார் என்று டிரைலரில் இருந்து தெரிய வந்துள்ளது. இதனால் கதை எப்படி இருக்கும் என்ற எண்ணத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவருடன் ரசிகர்கள் காத்திருந்த டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

டிரெய்லரின் ஆரம்பத்திலேயே, ஒரு பயங்கரமான கலவரம் காட்டப்பட்டுள்ளது. அதையடுத்து, நாங்கள் அனைவரும் ஒரே ரத்தம், இந்த ஜாதி, மதத்தை சொல்லி எங்களை அடிக்கிறீர்களே என்று சத்யராஜ், நாங்கள் ஒரே ரத்தம் என்பதை நிரூபிக்க அங்கிருந்தவர்களின் கையை கீறி நிருபிக்கிறார். சிவகார்த்திகேயனின் அறிமுகமும் நகைச்சுவை, என்னோட ரத்தம் சிவப்பு, என்னோட லைட் பிங்க் கலர்னு காட்டப்பட்டது. பள்ளி ஆசிரியராக இருக்கும் சிவகார்த்திகேயன் மீது பல புகார்கள் உள்ளன.

Tags :
|
|